யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் உதவி மேலாளர் (கடன்) (அளவுகோல் JMGS – I), உதவி மேலாளர் (IT) (அளவுகோல் JMGS – I) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் யூனியன் பாங்க் ஆப் இந்தியா உதவி மேலாளர் 2025 அறிவிப்பை கவனமாகப் படித்து அவர்களின் தகுதியை உறுதி செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் யூனியன் பாங்க் ஆப் இந்தியா உதவி மேலாளர் 2025 முடிவுகள் அறிவிக்கப்படும் வரை, வேலை செய்யும் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை வைத்திருக்க வேண்டும்.
காலி பணியிடங்களுக்கான விவரம்:
- உதவி மேலாளர் (கடன்) (அளவுகோல் JMGS – I), காலியிடங்கள்: 250, கல்வி தகுதி: பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ., எம்.எஸ்.சி. முடித்திருக்க வேண்டும், வயது வரம்பு: 22 – 30 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.சம்பளம்: ரூ.48480/- முதல் ரூ.85920/-.
- உதவி மேலாளர் (IT) (அளவுகோல் JMGS – I),காலியிடங்கள்: 250, கல்வி தகுதி: பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ., எம்.எஸ்.சி. முடித்திருக்க வேண்டும், வயது வரம்பு: 22 – 27 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும், சம்பளம்: ரூ.48480/- முதல் ரூ.85920/-.
குறிப்பு: அரசு விதிகளின்படி வயது தளர்வு
தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம் (GD), தனிப்பட்ட நேர்காணல் (PI) தேர்வு மையம் தமிழ்நாட்டில்: ஹென்னை, கோயம்புத்தூர், திருச்சி
விண்ணப்ப கட்டணம்: பெண்கள்/பட்டியல் இனத்தவர்/ பட்டியல் பழங்குடியினர்/ முன்னாள் ராணுவ வீரர் பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் -ரூ.177, இதர பிரிவனருக்கு பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் – ரூ.1180/-
விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் யூனியன் பாங்க் ஆப் இந்தியா அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.unionbankofindia.co.in/ கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் 30 ஏப்ரல் 2025 முதல் 20 மே 2025 வரை விண்ணப்பிக்கலாம்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 30 ஏப்ரல் 2025
விண்ணப்பிக்க கடைசி தேதி – 20 மே 2025
முக்கிய இணைப்புகள்: