தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் வேலை; 1299 காலியிடங்கள்; விண்ணப்பம் முடியும் தேதி 10 மே 2025

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் காவல் உதவி ஆய்வாளர்கள் (தாலுகா), காவல் உதவி ஆய்வாளர்கள் (AR) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் காவல் உதவி ஆய்வாளர்கள் 2025 அறிவிப்பை கவனமாகப் படித்து அவர்களின் தகுதியை உறுதி செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் காவல் உதவி ஆய்வாளர்கள் 2025 முடிவுகள் அறிவிக்கப்படும் வரை, வேலை செய்யும் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை வைத்திருக்க வேண்டும்.

காலி பணியிடங்களுக்கான விவரம்: 

  1. காவல் உதவி ஆய்வாளர்கள் (தாலுகா), காலியிடங்கள்: 933 பதவிகள் (ஆண் – 654 பதவிகள்), (பெண்கள் – 279 பதவிகள்), சம்பளம்: ரூ.36,900/- முதல் ரூ.1,16,600/-  , கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டம் முடித்திருக்க வேண்டும், வயது வரம்பு: விண்ணப்பதாரர் 20 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
  2. காவல் உதவி ஆய்வாளர்கள் (AR),காலியிடங்கள்: 366 பதவிகள் (ஆண் – 255 பதவிகள்), (பெண் – 111 பதவிகள்), கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டம் முடித்திருக்க வேண்டும், வயது வரம்பு: விண்ணப்பதாரர் 20 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும், சம்பளம்: ரூ.36,900/- முதல் ரூ.1,16,600/-.

குறிப்பு: அரசு விதிகளின்படி வயது தளர்வு

தேர்வு முறை: 1. எழுத்துத் தேர்வு (பகுதி 1 தமிழ் மொழி தகுதித் தேர்வு) 2. எழுத்துத் தேர்வு (பகுதி II முதன்மை எழுத்துத் தேர்வு) 3. உடற்கூறு அளவீட்டுத் தேர்வு 4. பொறையுடைமை சோதனை, 5. உடற்திறன் தேர்வு 6. சான்றிதழ் சரிபார்ப்பு 7. விவா -வாய்ஸ்

விண்ணப்ப கட்டணம்:  விண்ணப்பதாரர் தேர்வுக் கட்டணம் – ரூ.500/- செலுத்த வேண்டும். ஓபன் கோட்டா மற்றும் டிபார்ட்மென்ட் கோட்டா ஆகிய இரண்டிலும் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணம் ரூ.1000/- செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnusrb.tn.gov.in/ கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் 07 ஏப்ரல் 2025 முதல் 10 மே 2025 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதிகள்: 

விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 07 ஏப்ரல் 2025 

விண்ணப்பிக்க கடைசி தேதி – 10 மே 2025

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ இணையதளம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விண்ணப்ப படிவம்

Leave a Comment