தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலை; 70 காலியிடங்கள்; விண்ணப்பம் முடியும் தேதி 30 ஏப்ரல் 2025

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் துணை ஆட்சியர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், காவல் துணை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.), ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், தொழிலாளர் உதவி ஆணையர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் குரூப் 1 2025 அறிவிப்பை கவனமாகப் படித்து அவர்களின் தகுதியை உறுதி செய்ய வேண்டும்.

காலி பணியிடங்களுக்கான விவரம்: 

  1. துணை ஆட்சியர், காலியிடங்கள்: 28, சம்பளம்: ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/-  , கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டம் முடித்திருக்க வேண்டும், 
  2. துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) (பிரிவு – 1),காலியிடங்கள்: 07, கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டம் முடித்திருக்க வேண்டும், சம்பளம்: ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/-.
  3. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,காலியிடங்கள்: 19, கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டம் முடித்திருக்க வேண்டும், சம்பளம்: ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/-.
  4. உதவி இயக்குநர் (AD) ஊரக வளர்ச்சி,காலியிடங்கள்: 07, கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டம் முடித்திருக்க வேண்டும், சம்பளம்: ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/-.
  5. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,காலியிடங்கள்: 03, கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டம் முடித்திருக்க வேண்டும், சம்பளம்: ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/-.
  6. உதவித் தொழில் ஆணையாளர் (AC),காலியிடங்கள்: 06, கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டம் முடித்திருக்க வேண்டும், சம்பளம்: ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/-.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் அனைத்து பதவிகளுக்கும் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பிரிவு வாரியாக அதிகபட்ச வயது வரம்பு மற்றும் வயது சலுகை விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு பக்கத்தில் தெரிந்து கொள்ளவும்.

குறிப்பு: அரசு விதிகளின்படி வயது தளர்வு

தேர்வு முறை: முதல்நிலைத் தேர்வு (ஒற்றைத் தாள்), முதன்மைத் தேர்வு (எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு)

விண்ணப்ப கட்டணம்:  ஒரு முறை பதிவுக் கட்டணம் – ரூ.150/- முதல்நிலைத் தேர்வுக் கட்டணம் – ரூ.100/- முதன்மை எழுத்துத் தேர்வு கட்டணம் – ரூ.200/-

விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnpsc.gov.in/ கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் 01 ஏப்ரல் 2025 முதல் 30 ஏப்ரல் 2025 வரை விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

முக்கிய தேதிகள்: 

விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 01 ஏப்ரல் 2025 

விண்ணப்பிக்க கடைசி தேதி – 30 ஏப்ரல் 2025

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ இணையதளம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விண்ணப்ப படிவம்

Leave a Comment